CSK Captain ruthuraj told what was the reason to lost the match

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியில் கூறியுள்ளார்.முதல் இன்னிங்ஸின்போது இந்த பிட்சில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. இந்த ஸ்விங்கின் காரணமாகவே ரச்சின் ரவீந்திரா நிறைய பந்துகளை மிஸ் செய்தார்.
இந்த ஸ்விங்கும் எங்களது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டோம், இது ஒரு பின்னடைவாக இருந்தது.